இரணியன் நாடகம் (உத்தம வில்லன் திரைப்பட பாடல் வரிகள்)

இரணியன்:

என் உதிரத்தின் விதை,
என் உயிர் உதிர்த்த சதை,
வேறொருவனை பகவன் என பொறுத்திடுவேனோ
கிளர்க பிரஹலாதனை
கேட்டு தெளிகிறேன்

பிரஹலாதன்:

துணையில்லாதவனை துணையுடயோன் தொழுதேன்
எந்தையே வணக்கம்

இரணியன்:

வாடா மகனே வா
உன் சிறுவிரல் கொண்டு
என் சுடர்மணி மார்பில்
சுருள் முடி சுழற்ற
வாடா மகனே வா

எம் அந்தணர் சொல் கேளாது
உம் மனம் போல் நீ ஜபித்த பெயர்
நாத்திகம் அன்றோ பிள்ளாய்

இறைவன் யாம் என உலகே உகர்ந்தது
இரணியன் மகனே மதம் மாறுவதா?

உற்ற உன் பிழையை திருத்து
உண்மையின் நாமம் சொல்லிடு இவர் போல்

(ம்ரித்யுன் ஜெயஹோ … ம்ரித்யுன் ஜெயஹோ)

நீ சொல்ல வேண்டிய மந்திரம் எது தெரியுமா?

(ஓம் இரண்யாய நமஹா … ஓம் இரண்யாய நமஹா)

பிரஹலாதன்:   ஓம் … ஓம்

இரணியன்:       ஆஹ சொல்! அதுதான் சொல்!!

IN-2

பிரஹலாதன்:    ஓம் நாராயணாய … ஓம் நாராயணாய

இரணியன்:

எவன் இவன் நாரதனபடுவோ
எட்டு திசையும் எனையே தொழுதிட

என் மகன் வழிபட வேறொரு உருவோ
எனக்கொரு இணை என யாரையும் சொலவோ

பூதம் ஐந்தும் பொருத்திய பொருளோ
வேதம் நான்கும் விளங்கிய உருவோ

இரவும் பகலும் அகமும் புறமும்
பிரிவற்றதிலும் சாகா வரமுடயோன்

புரிந்திடு புரிந்திடு புரிந்திடு நீ

முடிவுரை என்றொன்று இல்லா காவியம் நான்

பிரஹலாதன்: அறியா பிறவி பிறந்தோம்
ஆளாய் பறந்தோம் திரிந்தோம்

ஹரி ஓம் என ஒர் நாமம்
அறிந்தோம் ஆய்தோம் உய்தோம்

இரணியன்:   பித்துகுளி கட்டு கதை கேட்டு
பட்டு போனாய் கெட்டு போனாய்

அஷ்டாக்ஷரம் துஷ்டபயல் நாமம்
அறியா பாலா அர்பா மூடா
அலியோ ஆணோ பேரொளி பெண்ணோ
அரனோ புலியோ நரியோ நாயோ

எத்தகை உயிரும் கொல்லாது எனையே
அறிவாய் அறிவாய் அறிவாய்

பிரஹலாதன்: அறிவோம் எனினும் அறியோம்
ஹரியின் குறளே ஓமனும்
இரணியன்:    ம்ரித்யுன்ஜெய வித்தை கற்றவன் நான்
பாலா நெடு வாழ்வும் பெற்றவன் நான்
நல்வழி கேளா உன் வழி நடந்து
ஹரி ஹரி என்று உன் விழி வழி சொன்னால்

மடிவாய் மடிவாய்

பிரஹலாதன்: நாதன் நாமம் பாடா
வாழ்வும் நானும் வேண்டேன்

இரணியன்:   மீனை தாம் என்றான்
ஆமை தாம் என்றான்
வெட்கம் கெட்டு பன்றியும் தாம் தான்
என்றவனா கடவுள்?

பிரஹலாதன்: யாதும் ஹரி
அவன் எதிலும் உளான்

இரணியன்:    எவரும் எந்த பொருளும் தெய்வமானால்
கும்பிட்ட கூட்டம் போதும்
குப்பை கூட சொர்க்கம் சேரும்

அகில உலகும் அழியும் அழியும்
வா வா வாடா

எங்கே ஹரியை நீ காட்டடா

( ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி
ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி)

<<—- **இரணியன் வதம்** —->>

கொடுங்கோலன் மாண்டான்
தனை கொன்று கொண்டான்
தொலை பாதகத்தின்
விலை கண்டு கொள்வீரே

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s