முத்தரசன் கதை (வில்லு பாட்டு)

இந்த கதை இங்கு நிற்கையில்
இன்னொரு இடத்தில (ஆமாம்) நடந்த கதை சொல்ல போறோம்

முத்துவள நாட்டை ஆண்ட கொற்றவன் சடயவர்மன்

சத்தியம் தவறா மன்னன் செங்கோல் ஆட்சி செய்து வந்தான்

அத்தனையும் நாசமாச்சு  பேராசையாலே சொந்தகாரர் சதியாலே

… மன்னர் வாழ்க …

நிலத்தாலே புலி விரட்டும் தமிழ் பெண்கள் வழி வந்த

கரத்தாலே புலி அடக்கும் மாவீரர் தமிழச்சி

… இளவரசி கற்பகவள்ளி வாழ்க …

கொற்றவனின் கொற்றவையின் சொந்த தம்பி முத்தரசன்

மச்சு மேல் நின்றிருந்த தன் மச்சானை மன்னவனை

கட்சிதமாய் கதை முடிக்க செங்கல்லை இலக்கி வைத்தான்

… மன்னன் வாழ்க சடைய மன்னன் வாழ்க …

((( சடைய மன்னன் மறைவு )))

மச்சானை மயானத்துக்கு அனுப்பி வைத்த மறு மாதம்

அக்காளை துணைக்கு அனுப்பி கொக்கரித்தான் முத்தரசன்

(((dramatic score by Ghibran)))

அக்காளின் ஒற்றை மகள் கற்பகத்தை

வக்கிரமாய் வயபடுத்த முற்பட்ட பாதகரை

கடித்து குதறி விட்டு  பித்து பிடித்தவளாய்

இளவரசி  மாறிவிட்டாள்

(((Interludes)))

கொடுங்கோலன் ஆட்சியிலே யாருக்குமே அமைதி இல்லை

குற்றம் உள்ள நெஞ்சு கொண்ட முத்தரசன் உட்பட

நாளையும் கோலையும் மிகையாய் நம்பியவன்

வேளை மோசமென சோழி போட்டு தெரிந்து கொண்டான்

(((  கோர மரணம் ப்ராப்தி ரஸ்து )))

கோர மரணம் ஒன்று நிச்சயம் உண்டு என்று

நாடியில் படித்ததால் நிலை குலைந்தான் முத்தரசன்

இத்தகைய தருணத்தில் உத்தமன் என்றொருவன்

மொத்தமாய் ஐந்து முறை மரணத்தை வென்ற செய்தி

முத்தரசன் காதுக்கு … ஆ … மிச்சமுள்ள காதுக்கு

எட்டிய மறுகணமே உத்தமனை கொண்டுவர

அரசாணை பிரபித்தான்

((( உத்தமன் நுழைவு)))

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s